தூய்மை பணியாளர்கள் குறை கேட்கும் கூட்டம்


தூய்மை பணியாளர்கள்  குறை கேட்கும் கூட்டம்
x

தூய்மை பணியாளர்கள் குறை கேட்கும் கூட்டம்

உடுமலை
உடுமலை நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களது குறைதீர்க்க ஆலோசனை கூட்டம் மற்றும் குறைகேட்கும் கூட்டம் நகராட்சி திருமண மண்டபத்தில் நேற்று  நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மு.மத்தீன் தலைமை தாங்கிபேசினார். அவர் பேசும்போது நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு துறை ரீதியாக எந்த குறை இருந்தாலும் தெரிவிக்கலாம்.தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார். 
 அத்துடன் தூய்மை பணியாளர்களது குறைகளை கேட்டறிந்தார். நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி துணைத்தலைவர் சு.கலைராஜன், கவுன்சிலர்லோகுபாண்டியன், நகராட்சி நகரமைப்பு அலுவலர் கோவிந்தராஜ், நகர்நல அலுவலர் கவுரி சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், பி.செல்வம், ராஜ்மோகன், சீனிவாசன், சுகாதார மேற்பார்வையாளர்கள் பாலு, பரமசிவம், ரவிசங்கர், முருகானந்தம், எம்.முருகானந்தம் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர

Next Story