முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்


முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 5 April 2022 11:02 PM IST (Updated: 5 April 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது.

திருவரங்குளம்:
திருவரங்குளம் அருகே உள்ள இம்மனம்பட்டி, தேத்தாம்பட்டி கிராமங்களில் முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளது. இக்கோவில்களில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்கள் விரதமிருந்து பால்குடம், காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை ெசலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் வீடுகள் தோறும் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ஆடு, கோழி வெட்டி நேர்த்திக்கடன் செய்தனர். இரவு மேளதாளத்துடன் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் ெசலுத்தினர். பின்னர் பெண்கள் அதிகாலை முளைப்பாரியை அய்யனார் குளக்கரைக்கு எடுத்து வந்து குலவையிட்டு குளத்தில் முளைப்பாரியை விட்டு சென்றனர்.

Next Story