மும்பை - நாக்பூர் விரைவு சாலை திட்டத்தில் இருந்து எனது பெயரை யாரும் அழிக்க முடியாது- தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
மும்பை - நாக்பூர் விரைவு சாலை திட்டத்தில் இருந்து எனது பெயரை யாரும் அழிக்க முடியாது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,
மும்பை - நாக்பூர் விரைவு சாலை திட்டத்தில் இருந்து எனது பெயரை யாரும் அழிக்க முடியாது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
அழிக்க முடியாது
மும்பை - நாக்பூர் இடையே பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரைவு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த திட்டம் குறித்து முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
இந்த திட்டத்திற்கான பெயரை எடுக்க சிவசேனா தங்களால் முடிந்த வரை முயற்சி செய்கிறது. ஆனால் அது வீணாகத்தான் போகும். இந்த திட்டத்தில் இருந்து எனது பெயரை அழிக்க முடியாது.
மகிழ்ச்சி அளிக்கிறது
கடந்த 20 ஆண்டுகளாக எனது சிந்தனையில் உருவான திட்டம் இந்த விரைவு சாலை. மராட்டிய மக்கள் எனக்கு முதல்-மந்திரியாகும் வாய்ப்பை தந்த போது, இந்த திட்டத்தை நான் செயல்படுத்தினேன். ஒருகாலத்தில் இந்த திட்டத்தை எதிர்த்தவர்கள், தற்போது இதை திறக்க வேகம் காட்டுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
அதே நேரத்தில் எல்லா பணிகளும் முழுமையாக முடிந்த பிறகு தான் சாலையை திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story