நவிமும்பையில் டீசல் பைப்லைனில் திடீர் தீ- திருடர்கள் கைவரிசையால் விபரீதம்
நவிமும்பையில் திருடர்கள் கைவரிசையால் டீசல் பைப்லைனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
மும்பை,
நவிமும்பையில் திருடர்கள் கைவரிசையால் டீசல் பைப்லைனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
திடீர் தீ
மும்பை சுத்திகரிப்பு ஆலையில் இருந்து மன்மாட் வழியாக டெல்லிக்கு குழாய் மூலமாக டீசல் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் நவிமும்பை மகாபே சீல்பாடா ரோடு வழியாக செல்லும் டீசல் பைப்லைனில் காலை டீசல் கசிவு ஏற்பட்டது. இதனால் சாலையோரம் கசிந்து நின்ற எண்ணெய் கசிவில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திருடர்கள் கைவரிசை
பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு உள்ள நிலையில், இந்த பைப்லைனில் மர்ம ஆசாமிகள் டீசலை திருடி உள்ளனர். இதனால் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கு காரணமான டீசல் திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story