முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 5 April 2022 11:41 PM IST (Updated: 5 April 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

திருப்பத்தூர், 
திருப்பத்தூர் நாகராஜன் நகர் பகுதியில் முத்தெடுத்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. அம்மன் வேப்ப மரத்தில் குடியிருக்கும் இந்த கோவிலில் இன்று பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இக்கோவிலின் 8-ம் ஆண்டு பங்குனித் திருவிழாவை முன்னிட்டு இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காப்புகட்டி, கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து, இரவில் கும்மி கொட்டி வழிபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து நேற்று அண்ணாசிலை அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பல்வேறு வீதிகள் வழியாக பால்குடம், அக்னிச்சட்டி, கரகம் எடுத்து, அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Next Story