ஆரம்ப சுகாதார நிலைய கெமிக்கல் குடோனில் தீ விபத்து
ஆரம்ப சுகாதார நிலைய கெமிக்கல் குடோனில் தீ விபத்து
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு தேவையான கெமிக்கல், பிளீச்சிங் பவுடர் மூடைகள், ஆசிட், கொசு மருந்து ஆகிய பொருட்கள் அடங்கிய குடோனில் இருந்து நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை எடுத்து சிறிது நேரத்தில் பிளீச்சிங் பவுடர் மூடைகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அறைகளில் இருந்து வெளியேறினார்கள். இதுகுறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு முதுகுளத்தூர், கமுதி ஆகிய 2 பகுதியிலிருந்தும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் எரிந்துகொண்டிருந்த பிளீச்சிங் பவுடர் மூடைகளை பத்திரமாக அப்புறப்படுத்தி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story