சீர்காழி-பனங்காட்டான்குடி சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?


சீர்காழி-பனங்காட்டான்குடி சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 5 April 2022 11:41 PM IST (Updated: 5 April 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி-பனங்காட்டான்குடி சாலையில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அங்கு மேம்பாலம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

சீர்காழி:
சீர்காழி-பனங்காட்டான்குடி சாலையில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அங்கு மேம்பாலம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
ரெயில்வே கேட் மூடல்
 சீர்காழி-பனங்காட்டான்குடி சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் கோவில்பத்து, பணமங்கலம், அகனி, தென்னங்குடி, வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, புங்கனூர், ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், அகர எலத்தூர், பனங்காட்டான்குடி மற்றும் சீர்காழி நகர் பகுதியில் இருந்து புறவழிச்சாலை வழியாக சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும்.
  இந்த ரெயில்வே கேட் வழியாக 30 நிமிடத்திற்கு ஒருமுறை ரெயில்கள் வந்து செல்வதால் அடிக்கடி கேட் மூடப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் அவசர நேரங்களில் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட முக்கிய வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. இதனால், ஆம்புலன்சில் ஏற்றிச் செல்பவர்கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
 மேலும், ரெயில்வே கேட் மூடப்படும்போது இருபுறங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கின்றன. ரெயில்வே கேட் திறக்கப்படும்போது வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பனங்காட்டான்குடி சாலையில் மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story