மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூர்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காசிநாதன் துறை தலைமை தாங்கினார். கணேசன், முனியசாமி, தர்மலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உயிர் காக்கும் மருந்துகளின் விலை உயர்வு ஆகியவற்றை வாபஸ் பெறக் கோரியும், சுங்கச்சாவடிகளை உடனடியாக அப்புறப்படுத்த கோரியும், மாநில அரசு சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக் கோரியும் கோஷமிட்டனர். இந்நிகழ்ச்சியில் தாலுகா செயலாளர் முனியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story