தேன்கனிக்கோட்டையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு டிஜிபி பாராட்டு
தேன்கனிக்கோட்டையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு டி.ஜி.பி. பாராட்டு தெரிவித்தார்.
தேன்கனிக்கோட்டை:
கர்நாடக மாநிலத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை வழியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு 300 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா தலைமையில், ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், அதனை கடத்தியவர்களையும் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா மற்றும் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோரை சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி, சான்றிதழ், பரிசுத்தொகை வழங்கினார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story