ராயக்கோட்டை அருகே சிமெண்டு மூட்டைகளுடன் சென்ற லாரியில் தீ


ராயக்கோட்டை அருகே சிமெண்டு மூட்டைகளுடன் சென்ற லாரியில் தீ
x
தினத்தந்தி 5 April 2022 11:43 PM IST (Updated: 5 April 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே சிமெண்டு மூட்டைகளுடன் சென்ற லாரியில் தீப்பிடித்து எரிந்தது.

ராயக்கோட்டை:
அரியலூரில் இருந்து 25 டன் சிமெண்டு ஏற்றி கொண்டு ஒரு லாரி கர்நாடக மாநிலம் தாவனகரே பகுதிக்கு சென்றது. இந்த லாரியை தர்மபுரியை சேர்ந்த வேல்முருகன் (வயது 36) என்பவர் ஓட்டி சென்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உள்ளுகுறுக்கி பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு சென்ற போது திடீரென லாரியில் தீப்பிடித்தது. இதுகுறித்து ராயக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சிமெண்டு மூட்டைகள் தீயில் சேதமானது. இந்த தீவிபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story