பாலக்கோடு அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


பாலக்கோடு அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 April 2022 11:43 PM IST (Updated: 5 April 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள தண்டுகாரணஅள்ளியை சேர்ந்தவர் தீனா (வயது23) தொழிலாளி. இவர் தனது தாயார் ராஜேஸ்வரியிடம் திருமணம் செய்து வைக்க கோரி தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். அதற்கு  மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதால் யாரும் பெண் தர மறுப்பதாக மகனிடம் கூறி உள்ளார். தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்ற விரக்தியில் வாலிபர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story