பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறில் விவசாயி கொலை


பாப்பிரெட்டிப்பட்டி அருகே  நிலத்தகராறில் விவசாயி கொலை
x
தினத்தந்தி 5 April 2022 11:44 PM IST (Updated: 5 April 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்டார்.

பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
 நிலத்தகராறு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் மணி (வயது62). இவரது அண்ணன் வீரமணி (67). இவருடைய மகன்கள் பிரபாகரன் (47), இளங்கோ (42). விவசாயிகளான இவர்களுக்கு நிலத்தகதராறு இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை மணி தனது நிலத்தை வாடகை டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற வீரமணி, அவரது மகன்கள் ஆகிய 3 பேரும் தடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வீரமணி, தம்பி மணியின் கழுத்தை பிடித்து தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது மணி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விவசாயி மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story