2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 6 April 2022 12:02 AM IST (Updated: 6 April 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அரியமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 2019-ம் ஆண்டு மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மதுரையை சேர்ந்த அழகுமுருகன் உள்ளிட்டோர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந் தேதி அரசு பஸ்சில் மதுரை நோக்கி சென்றனர். அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் கமுதக்குடி அருகே பஸ்சை வழிமறித்து அவர்களை தாக்கியது. இதில் காயம் அடைந்து மதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அழகுமுருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக பரமக்குடி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த அகிலன்(வயது 21), திருப்புவனம் புதூர் வடக்குத் தெருவை சேர்ந்த நிதிஷ் என்ற நிதிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் அகிலன், நிதிஷ்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார். இதை ஏற்று மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத், இந்தஇருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story