நாமக்கல் மாவட்டத்தில் அதிக மகசூல் பெற்ற பட்டு விவசாயிகளுக்கு பரிசு-கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்
நாமக்கல் மாவட்டத்தில் அதிக மகசூல் பெற்ற பட்டு விவசாயிகளுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கினார்.
நாமக்கல்:
மாநிலத்தில் 3-ம் இடம்
மாநில அளவில் சிறந்த பட்டுக்கூடு உற்பத்தி செய்த விவசாயிக்கான 3-ம் பரிசினை ராசிபுரம் தாலுகா மூலக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி கமலம் செங்கோடன் பெற்றார். அவர் தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் அதிக மகசூல் பெற்ற பட்டு விவசாயிகளுக்கு பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு பரிசு
அதன்படி இந்த ஆண்டு சிறந்த பட்டு விவசாயிகளாக தேர்வு செய்யப்பட்ட மூலக்காடு கிராமத்தை சேர்ந்த கமலம் செங்கோடனுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையையும், சேந்தமங்கலம் தாலுகா மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கோபிக்கு 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையையும், நஞ்சுண்டபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமிக்கு 3-ம் பரிசாக ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையையும் கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் முத்துப்பாண்டி மற்றும் பட்டு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story