மலையாள பகவதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
மலையாள பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரத்தில் மலையாள பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 3-ந் தேதி கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 4-ந் தேதி திருக்கண்ணார் ஈஸ்வரர் கோவில் அருகே காவிரி கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இன்று (புதன்கிழமை) பெரிய தேர் திருவீதியுலா நிகழ்ச்சியும், கிடா வெட்டுதலும் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) எருமை வெட்டுதலும், இரவு மலையாள சாமி குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையடுத்து, 8-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன், கரகம் எடுத்து செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story