கீழ்வீராணம் ஊராட்சியில் நீர்மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


கீழ்வீராணம் ஊராட்சியில் நீர்மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 6 April 2022 12:31 AM IST (Updated: 6 April 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வீராணம் ஊராட்சியில் நீர்மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பாணாவரத்தை அடுத்த கீழ்வீராணம் ஊராட்சியில் நீர்மேலாண்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 

ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லட்சுமிபதி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
சூரைகுளம் பெருமாள் கோவில் தெருவில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முடிவடைந்தது. 

ஊர்வலத்தில் கலந்துெகாண்டவர்கள், சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மழைநீரை சேமிக்க வேண்டும். வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். 
இதில் பணி மேற்பார்வையாளர் கிருஷ்ணவேணி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Next Story