ஆடு திருட முயன்ற மாணவர்கள் கைது


ஆடு திருட முயன்ற மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 6 April 2022 12:55 AM IST (Updated: 6 April 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

ஆடு திருட முயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவெறும்பூரை அடுத்த   நவல்பட்டு அருகே நவலிகுளம் பகுதியில் 2 சிறுவர்கள் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டு இருந்தனர். இதனையடுத்து கிராம மக்கள் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆடு திருட முயற்சித்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்  பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் 10-ம் வகுப்பு மாணவர்கள் என தெரியவந்தது.

Next Story