திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு ரெயில்கள்


திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு ரெயில்கள்
x
தினத்தந்தி 6 April 2022 12:59 AM IST (Updated: 6 April 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

திருச்சி, ஏப்.6-
திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு ரெயில்கள்  இயக்கப்படுகிறது.
சிறப்பு ரெயில்
சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கோடைகால 2 வாராந்திர சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வேயில் திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில் எண்.06005 தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை வாராந்திர அதிவிரைவு சிறப்பு ெரயில் வருகிற 22-ந்தேதி முதல் ஜூன் மாதம் 24-ந்தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இதில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இரவு 12.25 மணிக்கு வரும். பின்னர் 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் ரெயில் எண்.06006 நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை வாராந்திர சிறப்பு ெரயில் வருகிற 24-ந்தேதி முதல் ஜூன் 26-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 11.20 மணிக்கு வந்து 11.25 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. பின்னர் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
தென்காசி, பாவூர் சத்திரம்
இதேபோல் தென்காசி வழியாக நெல்லையில் இருந்து தாம்பரம் வரை வாராந்திர சிறப்பு ரெயில் எண். 06004 வருகிற 17-ந்தேதி முதல் ஜூன் 26-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்து 3.50 மணிக்குபுறப்பட்டு செல்கிறது. மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
மறுமார்க்கமாக ரெயில் எண். 06003 தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு வருகிற 18-ந்தேதி முதல் ஜூன் 20-ந்தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு அதிகாலை 3.05க்கு வந்து 3.10-க்கு புறப்படுகிறது. பின்னர் மறுநாள் காலை 10.35 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர் சத்திரம், கீழகடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

Next Story