பூங்கா, உணவருந்தும் கூடம் அமைக்கப்படும்


பூங்கா, உணவருந்தும் கூடம் அமைக்கப்படும்
x
தினத்தந்தி 6 April 2022 1:03 AM IST (Updated: 6 April 2022 1:03 AM IST)
t-max-icont-min-icon

பூங்கா, உணவருந்தும் கூடம் அமைக்கப்படும் என்று டீன் தெரிவித்தார்.

திருச்சி, ஏப்.6-
தமிழக அரசின் மருத்துவமனை தூய்மை இயக்கம் சார்பில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் "நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை" என்ற திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தூய்மைப்பணிகளை நேற்று டீன் வனிதா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சுத்தத்துடனும் சுகாதாரத்துடன் தினமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் இதன் ஒரு அங்கமாக மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் இளைப்பாறுவதற்காக சிறப்பு பூங்கா, நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு உணவு உண்ணும் கூடம், குடிநீர் மற்றும் நாற்காலி வசதியுடன் உருவாக்கப்பட உள்ளது. மேலும் நோயாளிகள் எளிமையாக தாங்கள் அணுகவேண்டிய மருத்துவப் பிரிவை தெரிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டும் பலகை தேவைக்கேற்ப அமைக்கப்பட உள்ளது.மருத்துவமனை வளாகத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு பிரத்யேக இடங்கள் அமைக்க இருக்கிறோம். அத்துடன் மருத்துவமனை வளாகத்தில் நிழல் தரும் மரங்களை அதிகமாக வளர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றார். இந்த ஆய்வின் போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா திருவள்ளுவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story