பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கைது


பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 6 April 2022 1:12 AM IST (Updated: 6 April 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கைது

மணிகண்டம், ஏப்.6-
மணிகண்டம் அருகே உள்ள மேக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் லெட்சுமநாராயணன் (வயது 30). கூலித்தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, நடந்து சென்ற 45 வயது பெண்ணை வீட்டில் இறங்கி விடுவதாக கூறி ஏற்றி சென்றுள்ளார். ஆனால் அவர் அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து செல்லாமல் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போடவே அவ்வழியே சென்றவர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில்  மணிகண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து லெட்சுமநாராயணனை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை திருச்சி ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story