ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2022 1:26 AM IST (Updated: 6 April 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சாத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தூர், 
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் சாத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், இருசக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலைப்போக்குவரத்து மாவட்ட தலைவர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார். இதைத்தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் தெய்வானை, விவசாய தொழிலாளர் சங்கம் மனோஜ்குமார், சாத்தூர் நகர் பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் டூரிஸ்ட் வேன் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story