கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 6 April 2022 1:32 AM IST (Updated: 6 April 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி கலந்து கொண்டு பேசுகையில், இணையத்தின் வழியாக நடக்கும் குற்றங்களில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது பற்றியும், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் எடுத்துக்கூறினார். தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவமீனா பேசுகையில் இணையத்தின் வழியாக நடக்கும் குற்றங்களின் வகைகளை மாணவிகளுக்கு எடுத்துக்கூறினார். சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் பேசுகையில், இணையத்தின் வழியாக நடக்கும் குற்றங்களை பற்றி எடுத்துக்காட்டுகளுடன் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story