விவசாய பணிகளுக்கு தடையின்றி மின்சாரம் வினியோகிக்க கோரிக்கை
விவசாய பணிகளுக்கு தடையின்றி மின்சாரம் வினியோகிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம், பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் டெல்டா அல்லாத பகுதிகளான குழு 2-ன் படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு விவசாயிகளுக்கு பகலில் காலை 9.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது மாவட்டத்தில் உள்ள 15 துணை மின் நிலையங்களில் இருந்து விவசாயிகளுக்கு பகல், இரவு நேரத்தில் வினியோகிக்கப்படும் மின்சாரம், குறைந்த மின் அழுத்தத்தில் வினியோகிக்கப்படுகிறது. அவ்வப்போது மின் தடையும் ஏற்படுகிறது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பேரளி துணை மின் நிலையத்தில் இருந்து சிறுகுடல், கீழப்புலியூர், கே.புதூர் போன்ற பகுதிகளில் அடிக்கடி இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எனவே மாவட்டம் முழுவதும் சரியான மின் அழுத்தத்தில் விவசாயிகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
Related Tags :
Next Story