மாணவியை பலாத்காரம் செய்த 2 சிறுவர்கள் போக்சோவில் கைது
மாணவியை பலாத்காரம் செய்த 2 சிறுவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:
பலாத்காரம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவர் ஒருவருக்கும், 14 வயதான 9-ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அந்த மாணவர், அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானதாக தெரிகிறது.
இந்நிலையில் அந்த மாணவி, 16 வயதுடைய மற்றொரு சிறுவனிடம் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த மாணவர், அந்த மாணவியுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதையடுத்து அந்த சிறுவனும் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் கால்களில் வீக்கம் ஏற்பட்டு வயிறு பெரியதாக இருந்துள்ளது.
கர்ப்பம்
இதனால் மாணவியின் பெற்றோர், அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அந்த மாணவி 9 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்காக வெளியூர்களுக்கு செல்லும் சமயங்களில் மாணவி தனியாக வீட்டில் இருந்ததை பயன்படுத்தி, அவர் பலாத்காரம் செய்யப்பட்டது, தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து அந்த மாணவர் மற்றும் சிறுவனை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தினார். மேலும் அவர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story