ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில், சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில், சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
சொத்து வரி உயர்வு
அப்போது அவர்கள் கூறியதாவது:-
கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கும் திட்டம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் பொட்ரோல், டீசல் விலையை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்து வரி உயர்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே தி.மு.க. அரசு உடனடியாக சொத்து வரிய உயர்வை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்தும், தி.மு.க. அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.சி.பொன்னுதுரை, மேயர் மல்லிகா பரமசிவம், பகுதி செயலாளர்கள் மனோகரன், பழனிச்சாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி இணைச்செயலாளர் ஜெயராமன், மாணவர் அணி இணைச்செயலாளர் நந்தகோபால், பகுதி அவைத்தலைவர் மீன்ராஜா என்கிற ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர்கள் கே.எஸ்.கோபால், நாச்சிமுத்து, மாநகர் பிரதிநிதி ஆஜம், புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் சாமிநாதன், பெருந்துறை தொகுதி முன்னாள் செயலாளர் திங்களூர் கந்தசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் பழனிச்சாமி, பேரூர் துணைச்செயலாளர் சிவக்குமார், கிழக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் மார்ட்டின்ராஜ், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story