அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அபராதம்
கடையத்தில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடையம்:
கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தனியார் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தினமும் லாரிகள் மூலம் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் கடையத்தில் போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக கேரளா நோக்கி கனிம வளம் ஏற்றிச்சென்ற 16 லாரிகளை மடக்கி சோதனையிட்டனர். இதில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிகளுக்கு போலீசார் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story