சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா


சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
x
தினத்தந்தி 6 April 2022 2:00 AM IST (Updated: 6 April 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

விராலிகாட்டூர் சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா இன்று நடக்கிறது.

அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம் விராலிகாட்டூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கொடியேற்றம், கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபாட்டனர். மேலும் இளைஞர்கள் கம்பத்தை சுற்றி கம்பத்தாட்டம் ஆடி வந்தனர். 
கோயிலை சுற்றி அக்னி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் மற்றும் மத்தளம் தட்டி வரும் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது பக்தர் ஒருவர் படுத்தபடி வயிற்றின் மீது அக்னி சட்டியை வைத்துக்கொண்டும், மற்றொரு பக்தர் வயிற்றின் மீது மத்தளத்தை வைத்து படுத்தபடி அடித்துக்கொண்டு கோயிலை சுற்றி வந்தனர். இதைத்தொடர்ந்து கோவில் முன்பு விராலி இலைகள் மூலம் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பந்தலில் அமர்ந்து இருந்தால் அவர்கள் நோய் நொடி இல்லாமல் இருப்பர் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் விராலி இலை பந்தலில் அமர்ந்து சென்றனர். 
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா இன்று (புதன்கிழமை) நைடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடுவார்கள்.

Next Story