தென்காசியில் திராவிடர் கழக பொதுக்கூட்டம்- கி.வீரமணி பங்கேற்பு


தென்காசியில் திராவிடர் கழக பொதுக்கூட்டம்- கி.வீரமணி பங்கேற்பு
x
தினத்தந்தி 6 April 2022 2:02 AM IST (Updated: 6 April 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் நடந்த திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி கலந்து கொண்டார்.

தென்காசி:
திராவிடர் கழகம் சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில், நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் வீரன் தலைமை தாங்கினார். தென்மண்டல பிரசார குழு செயலாளர் டேவிட் செல்லத்துரை, மாநில அமைப்பாளர் குருசாமி, தென்காசி மாவட்ட செயலாளர் முருகன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் ஆறுமுகம், நெல்லை மண்டல தலைவர் காசி, பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம பிரசார குழு மாநில அமைப்பாளர் அன்பழகன் தொடக்க உரையாற்றினார். கட்சியின் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், நகர்மன்ற தலைவர் சாதிர், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘நம் குழந்தைகள் மருத்துவ கல்வி படிக்க வேண்டாமென வைக்கப்படும் கண்ணிவெடி தான் நீட் தேர்வு. நாங்கள் இந்த கண்ணிவெடிகளை எல்லாம் தாண்டி சென்று விடுவோம். பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் குழந்தைகளுக்காகவும் தான் நீட் தேர்வு வேண்டாம் என்று போராடுகிறோம். மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு என்ற அறிவிப்பை வேண்டாம் என்கிறோம்’ என்றார்.

Next Story