இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் தற்கொலை


இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 6 April 2022 2:02 AM IST (Updated: 6 April 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை, 

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் அகல்யா (வயது 21). இவருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்திருந்தனர். இன்று (புதன்கிழமை) இவர்களது திருமணம் திருப்புவனத்தில் நடக்க இருந்தது. எனவே திருமண ஏற்பாடுகளை இருவீட்டினரும் தீவிரமாக செய்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த அகல்யா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.அதில் அகல்யாவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும்,அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story