குண்டேரிப்பள்ளம் அணையில் கலெக்டர் ஆய்வு
குண்டேரிப்பள்ளம் அணையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அணையின் நீர் கொள்ளளவு, நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அணைப்பகுதியில் பூங்கா அமைத்து பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து கொண்டையம்பாளையம் ஊராட்சி பகுதியில் செயல்படும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது கோபி தாசில்தார் தியாகராஜன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவிப் பொறியாளர் கல்பனா ஆகியோர் உடன் இருந்தார்கள்.
Related Tags :
Next Story