மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு


மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 6 April 2022 2:19 AM IST (Updated: 6 April 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அம்மாபேட்டை பகுதியில் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.

சேலம்:-
சேலம் அம்மாபேட்டை பகுதியில் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.
சாக்கடை கால்வாய்
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
அதன்படி கிச்சிப்பாளையம் மாநகராட்சி பள்ளியில் ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு மைய கட்டிடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அந்தேரிப்பட்டியில் சாலை அமைத்தல், தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட பணிகளை ஆய்வு நடத்தினர்.
நடை மேடை அமைக்கும் பணி
பின்னர் ரூ.34 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகங்கள், கழிப்பிட கட்டிட பணிகளை பார்வையிட்டனர். அதன்பிறகு எருமாபாளையம் பகுதியில் உள்ள திடக்கழிவு சேமிப்பு கிடங்கை பார்வையிட்டனர். தொடர்ந்து ரூ.21 கோடியே 31 லட்சத்தில் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புல் தளங்களுடன் கூடிய திறந்தவெளி பூங்கா, விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம், நடைமேடை அமைக்கும் பணிகளை ஆய்வு நடத்தினர்.
தொடர்ந்து பழைய திடக்கழிவுகள் சமன்படுத்தும் பணிகளை பார்வையிட்ட அவர்கள் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களிடம் அறிவுறுத்தினர். ஆய்வின் போது துணை மேயர் சாரதாதேவி, மாநகர பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந்த், வார்டு கவுன்சிலர் இமயவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story