கல்லறை தோட்டத்தில் முதியவர் தற்கொலை
கருங்கல் அருேக கல்லறை தோட்டத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல்:
கருங்கல் அருகே மாதாபுரம் ஆனியான்விளை பகுதியைச் சேர்ந்தவர் மேரிடையனேஷ் (வயது 60). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு ஒரு கல்லறை தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story