100 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
திருவண்ணாமலையில் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை, ஏப்.7-
திருவண்ணாமலை நகர பகுதியில் தடை செய்யப்பட்ட ஒருமுறை உபயோக்கப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
அதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் மோகன், துப்புரவு ஆய்வாளர்கள் கார்த்திகேயன், செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் நகர பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நகராட்சி அலுவலர்கள் ஒவ்வொரு கடையாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் 100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story