குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு


குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 6 April 2022 7:35 PM IST (Updated: 6 April 2022 7:35 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

ஊட்டி

ஊட்டி மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி. பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு திடீரென ஆய்வு செய்தார். குடிநீரை அருந்தி, அதன் தரத்தை உறுதி செய்தார். 

இந்த ஆய்வு குறித்து கலெக்டர் அம்ரித் கூறும்போது, நீலகிரியில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா தலமாக உள்ள காரணத்தால் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்துக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு, எந்திரத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தேவையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்து வருகின்றனர் என்றார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story