லாரியில் கடத்திய ரூ.82,500 புகையிலை பறிமுதல்
தமிழக-கர்நாடக எல்லையில் லாரியில் கடத்திய ரூ.82,500 புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்
தமிழக-கர்நாடக எல்லையில் லாரியில் கடத்திய ரூ.82,500 புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் நேற்று இரவில் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கர்நாடகாவில் காய்கறிகள் ஏற்ற வந்த மினி லாரியை நிறுத்தி டிரைவர், கிளீனரிடம் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் லாரியில் ஏறி போலீசார் சோதனையிட்டனர். அதில் காய்கறி மூட்டைகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.82 ஆயிரத்து 500 ஆகும்.
கைது
இதையடுத்து மினி லாரியுடன் டிரைவர், கிளீனரை பிடித்து மசினகுடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவர்கள் ஊட்டி எட்டின்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த டிரைவர் ரகீப்(வயது 38), குன்னூர் பகுதியை சேர்ந்த கிளீனர் பிரவீன் குமார்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story