கோவில் திருவிழாவுக்கு தயாராகும் அக்னி சட்டி
தேவதானப்பட்டி பகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி பகுதியில் பங்குனி மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாகும். அதில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, கோட்டார்பட்டி, காமக்காபட்டி, நல்லகருப்பன்பட்டி உட்பட அனைத்து ஊர்களிலும் முத்தாலம்மன், காளியம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறும். இந்த திருவிழாவில் நேர்த்தி கடனாக பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வழிபாடு செய்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த பகுதியில் கோவில் திருவிழாக்கள் நடைபெறவில்லை.
தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் கோவில் திருவிழாக்கள் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே இந்த ஆண்டு தேவதானப்பட்டி பகுதியில் கோவில் திருவிழாக்கள் நடத்துவதற்கு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் அதிகம் பேர் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடனை செலுத்துவார்கள் என தெரிகிறது.
இதனால் தேவதானப்பட்டி பகுதியில் மண்பானை தொழிலாளர்கள் அக்னி சட்டி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக புல்லக்காபட்டி, டி.கள்ளிப்பட்டி ஆகிய கிராமங்களில் அக்னி சட்டி தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story