தடுப்பணை உடைப்பால் தவிக்கும் விவசாயிகள்


தடுப்பணை உடைப்பால் தவிக்கும் விவசாயிகள்
x
தடுப்பணை உடைப்பால் தவிக்கும் விவசாயிகள்
தினத்தந்தி 6 April 2022 9:26 PM IST (Updated: 6 April 2022 9:26 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பணை உடைப்பால் தவிக்கும் விவசாயிகள்

பேரூர்

கோவை மாவட்டம்பேரூர் அருகே நரசீபுரம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கிருந்து உருவாகி வெளியேறும் வைதேகி சிற்றோடை, பல கிலோ மீட்டர்பயணப்பட்டு நொய்யல் ஆற்றில் கலக்கிறது. 

இந்த நிலையில், நரசீபுரம் வைதேகி நீர்வீழ்ச்சி அருகே பச்சான் வயல் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணை அமைக்கப்பட்டது. இங்கு தேக்கி வைக்கப்படும் நீரால் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது.  


சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலத்தின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், வாய்க்கால் பாசனமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த சிற்றோடையின் குறுக்கே, கட்டப்பட்ட தடுப்பணை கடந்த 3 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் தனிப்பட்ட ஆதாயத்திற்கு சிலர் இந்த தடுப்பணையை உடைத்ததாக தெரிகிறது. 

இதனால், நரசீபுரம் பகுதியில் நிலத்தடி நீர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாய உற்பத்தி பெரிதளவில் குறைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் தவிக்கும் நிலை உள்ளது.

மேலும், உடைக்கப்பட்ட தடுப்பணையை புதுப்பித்து சீரமைக்கக்கோரி, விவசாயிகள், பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம், தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.தென்னை, வாழை, பாக்கு, வெங்காயம் போன்ற சாகுபடி விவசாயம் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. விவசாயத்திற்கு நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ள நிலையில் தடுப்பணையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையடுத்து உடைக்கப்பட்ட தடுப்பணையை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி, துணை தலைவர் பெரியசாமி மற்றும் நரசீபுரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஜெகதீஸ், பழனிச்சாமி, ரவிக்குமார், ராசு, செல்வராஜ், மணிகண்டன், ஆறுச்சாமி உள்ளிட்ட விவசாயிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Next Story