மருத்துவத்துறை பணியாளர்கள் உண்ணாவிரதம்


மருத்துவத்துறை பணியாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 7 April 2022 12:15 AM IST (Updated: 6 April 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் மருத்துவத்துறை பணியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருவாரூர்:-

திருவாரூரில் மருத்துவத்துறை பணியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். 

பணி அமர்த்த வேண்டும்

கொரோனா நோய் தொற்று பரவிய காலத்தில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை ரத்து செய்து மீண்டும் அவர்களை பணியில் அமர்த்த வேண்டும். 
அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் 2 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

உண்ணாவிரதம்

அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 2 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கியது. 
உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வினோஷா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவிதா முன்னிலை வகித்தார். நாகை செல்வராஜ் எம்.பி., சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பின் மாநில தலைவர் காளிதாசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சந்திரசேகர ஆசாத், அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, பூபதி, ராஜா, அருள்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story