மீனவர்கள் 3 பேர் சொந்த ஊர் திரும்பினர்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் 3 பேர் சொந்த ஊர் திரும்பினர். கொரோனா தொற்று காரணமாக ஒருவர் வரவில்லை.
பொறையாறு
கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 32 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலஙகை கடற்படையினர் சிறை பிடித்தனர். தற்போது அவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் மூலம் நேற்று அதிகாலை சென்னை வந்தடைந்தனர். அவர்களில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த நவீன்குமார் (வயது 27), சந்திரபாடியை சேர்ந்த அய்யப்பன் (33), சின்னங்குடியை சேர்ந்த கவியரசன் (24) ஆகிய 3 மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
ஒருவர் வரவில்லை
அவர்களை மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் அந்தந்த கிராம பஞ்சாயத்தார் முன்னிலையில் ஒப்படைத்தனர். விடுதலை செய்யப்பட்ட தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவர் அனுப்பி வைக்கப்படவில்லை. கொரோனா குணமடைந்ததும் அவர் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்படுவார் என்று தெரிகிறது. இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் சொந்த ஊர் திரும்பியதால் அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story