வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகேஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சாலை பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். நாள்தோறும் உயரும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story