ஓசூர் அருகே தனியார் நிறுவன தொழிலாளி வீட்டில் ரூ1½ லட்சம் நகைகள் வெள்ளி பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
ஓசூர் அருகே தனியார் நிறுவன தொழிலாளி வீட்டில் ரூ.1½ லட்சம் நகைகள்-வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே தனியார் நிறுவன தொழிலாளி வீட்டில் ரூ.1½ லட்சம் நகைகள்-வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது47), தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 1-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தஞ்சைக்கு சென்றார். 3-ந்தேதி அவரது வீட்டு கதவு திறந்து இருந்தது.
இதுகுறித்து அவரது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் அருள் என்பவர், சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் ஓசூருக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது, மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் 220 கிராம் வெள்ளி பொருட்கள் திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இந்த திருட்டு சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது ெதரியவந்தது.
இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். திருட்டு போன நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story