ஓசூர் நகராட்சி அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓசூர் நகராட்சி அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்:
ஓசூரில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதில் தலைமை தாங்கினார். இதில், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மாதையன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர துணைச் செயலாளர்கள் பாஸ்கர் ரெட்டி, நூர் மற்றும் நடைபாதை வியாபார சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர், மாதர் சங்கம், இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆட்டோவுக்கு மாலை அணிவித்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story