பெட்ரோல் டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் உபேத் தலைமை தாங்கினார். தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சேகர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சக்கரவர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினார். வாஜித் பாஷா நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே மத்திய அரசு போர்க்கால அடிப்படையில், இவற்றின் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story