குமரியில் 125 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
குமரி மாவட்ட வனத்துறை சார்பில் 125 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட வனத்துறை சார்பில் 125 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
ஆமை முட்டைகள்
குமரி மாவட்டத்தில் கடல் ஆமைகளை பாதுகாக்கும் விதமாக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து வனத்துைற சார்பில் கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள் துவாரகாபதியில் உள்ள ஆமை குஞ்சுகள் பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. பின்னர் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளியே வந்தது, அவை கடலில் விடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை 5 ஆயிரத்து 993 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 1317 முட்டைகள் பொரித்து வந்த ஆமை குஞ்சுகள் வனத்துறை சார்பில் கடலில் விடப்பட்டு இருக்கின்றது.
கலெக்டர் அரவிந்த்
இந்த நிலையில் தற்போது மேலும் 125 முட்டைகள் பொரித்து ஆமை குஞ்சுகள் வெளியே வந்தன. அந்த ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி துவாரகாபதியில் உள்ள ஆமை பொரிப்பகத்தின் அருகே உள்ள கடற்கரையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் கலந்துகொண்டு மாவட்ட வன அதிகாரி இளையராஜா முன்னிலையில் ஆமை குஞ்சுகளை கடலில் விடப்பட்டன.
நிகழ்ச்சியில் பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன், வன காப்பாளர்கள் பிரபாகர், அர்ச்சுனன், வேட்டை தடுப்பு காவலர்கள் சிவா, இந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story