துணை போலீஸ் கமிஷனரின் மைத்துனர் கைது
அங்காடியா வழக்கில் துணை போலீஸ் கமிஷனரின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
அங்காடியா வழக்கில் துணை போலீஸ் கமிஷனரின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்காடியா வழக்கு
மும்பையில் அங்காடியா அமைப்பினர் பாரம்பரிய கூரியர் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வியாபாரிகள் கொடுத்துவிடும் அதிகளவிலான பணம், நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து செல்கின்றனர்.
இந்தநிலையில் அங்காடியா அமைப்பினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில் போலீஸ் துணை கமிஷனர் சவுரப் திரிபாதி தங்களிடம் இருந்து மாதந்தோறும் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்பதாக கூறியிருந்தனர். மேலும் சில போலீசார் தங்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும் கூறியிருந்தனர்.
மைத்துனர் கைது
இந்த வழக்கில் போலீசார் எல்.டி. மார்க் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 3 அதிகாரிகள் மற்றும் சவுரப் திரிபாதியின் வீட்டு வேலைக்காரரை கைது செய்து இருந்தனர். இதேபோல மாநில அரசு ஐ.பி.எஸ். அதிகாரியான சவுரப் திரிபாதியை பணியிடை செய்து இருந்தது.
இந்தநிலையில் போலீசார் இந்த வழக்கில் சவுரப் திரிபாதியின் மைத்துனர் அசுதோஷ் மிஸ்ராவை கைது செய்து உள்ளனர். இவர் உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தியில், விற்பனை வரித்துறை உதவி கமிஷனராக உள்ளார். சவுரப் திரிபாதி அங்காடியாக்களிடம் இருந்து பறித்த பணத்தை இவர், வாங்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story