முக்கண்ணாமலைப்பட்டி அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை


முக்கண்ணாமலைப்பட்டி அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 6 April 2022 10:57 PM IST (Updated: 6 April 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

அன்னவாசல்:
முக்கண்ணாமலைப்பட்டி அரசு மருத்துவமனையில், தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொண்டனர். மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் அருகே இருக்கும் நபர்கள் உடனடியாக மீட்புப் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும். நோயாளிகளை காப்பாற்றுவது, தீயணைப்பு கருவிகளை இயக்கும் முறைகள் குறித்தும், செயற்கையாக தீயை உருவாக்கி, அதை மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் அணைக்க வைப்பது போன்ற பயிற்சியும் அளிக்கப்பட்டது. சிறிய அளவில் தீ விபத்து ஏற்படும் போது பொதுமக்களே அந்த தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்தும், மின் சாதனங்களை முறையாக பராமரிப்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதில் மருத்துவர் ஆசிக்அசன்முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story