வடகாடு பகுதியில் பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை


வடகாடு பகுதியில் பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 6 April 2022 11:10 PM IST (Updated: 6 April 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

வடகாடு பகுதியில் பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

வடகாடு:
வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இந்த ஆண்டு அதிக அளவில் பச்சை மிளகாயை ஏக்கர் கணக்கில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அவை தற்போது நன்கு வளர்ச்சி அடைந்து காய்க்க துவங்கியுள்ளதை தொடர்ந்து விவசாய தொழிலாளர்கள் மூலமாக, பச்சை மிளகாயை அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் தற்போது பச்சை மிளகாய் கிலோ ஒன்றுக்கு ரூ.15-க்கு மட்டுமே விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி வருவதால் கடன் வாங்கி செலவு செய்த முதலீடாவது திரும்ப கிடைக்குமா? என்ற கவலை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து பச்சை மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் தான் கொரோனா பரவலால் பச்சை மிளகாய் ஏற்றுமதி தடைப்பட்டு மிளகாய் செடிகளிலேயே பழுத்து வீணாகி வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டாவது உரிய விலைக்கு விற்பனை ஆகும் என நினைத்து இருந்த விவசாயிகள் மத்தியில் விலை வீழ்ச்சியால் அதிருப்தி அடைந்த நிலையில் இருந்து வருகின்றனர். மேலும் ஆரம்பத்தில் பச்சை மிளகாய் உற்பத்தி குறைந்து இருந்த போது ஆந்திராவில் இருந்து கூட பச்சை மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை ஆனதும் குறிப்பிடத்தக்கது ஆகும். இது ஒரு புறம் இருக்க இல்லத்தரசிகள் சமையலுக்கு பயன்படுத்தும் பட்ட மிளகாய் விலையோ எந்த ஆண்டும் இல்லாத ஒன்றாக கிலோ ஒன்று ரூ.220 என்று சத்தமில்லாமல் உயர்வு பெற்று விற்பனை ஆகி வருவது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது என்றனர்.

Next Story