அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி வகுப்பை புறக்கணித்து மாணவ-மாணவிகள் தர்ணா


அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பள்ளி வகுப்பை புறக்கணித்து மாணவ-மாணவிகள் தர்ணா
x
தினத்தந்தி 6 April 2022 11:19 PM IST (Updated: 6 April 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி வகுப்பை புறக்கணித்து ஆலமரத்தடியில் மாணவ, மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அன்னவாசல்:
அடுக்குமாடி குடியிருப்பு 
அன்னவாசல் அருகே வடசேரிப்பட்டியில் அரசுக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் நிலத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.44 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்பிறகு நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த 1 வாரமாக மீண்டும் கட்டுமான பணியை தொடங்குவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா
இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி வகுப்புகளை புறக்கணித்து அங்குள்ள ஆலமரத்தடியில் கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊர் மக்கள் சார்பில் மதிய உணவு தயாரித்து பரிமாறப்பட்டது. பின்னர் மாணவர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

Next Story