குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி, பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும். கலெக்டர் பேச்சு


குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி, பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும். கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 6 April 2022 11:20 PM IST (Updated: 6 April 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி, பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி மற்றும் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு நுகர்பொருள் அலுவலர்கள் வழிவகை செய்ய வேண்டும. புகார்கள் ஏதுமின்றி பார்த்துக்கொள்ளவேண்டும். மேலும் பொருட்களின் இருப்பு தேவையான அளவில் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அரிசி கடத்தலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப அட்டை கோரிய மனுக்கள் மீது காலதாமதமின்றி தீர்வு காண வேண்டும். பயோமெட்ரிக் முறையில் உணவுப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், வட்ட வழங்கல் அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story