அரசு பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சங்கராபுரம் அருகே அரசு பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் கனிமொழி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சுடர்விழி, ராஜேஸ்வரி, மலர், மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மணிமொழி வரவேற்றார். இதில் சங்கராபுரம் பெண் போலீஸ் வனிதா கலந்து கொண்டு காவலன் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி கூறினார். மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஏதேனும் பாலியல் தொல்லை ஏற்பட்டால் அது குறித்த தகவலை உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியைகள் சாந்தி, விமலா மற்றும் பள்ளி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story